பெருவரம் கேட்டேன்.
அவள் ஆடுகிறாள். அன்னையாய் சகியாய் குருவாய். அவள் பாதம் இட்ட இடம் சுட்டும் மணலை நீறுபூசி தோற்றம் நீங்கி தேசம் செல்வம் பெயர்கள் துறந்து அற்று போகும் அற்றை நிலவாய் கொற்றவை அவள் பாதம் பணிய சின்ன முறுவலில் ஞானப் பேழை சன்ன பார்வையில் அம்ருதம் அடைந்து ஸ்தூல ஜென்மம் முழுதும் கடந்து மோன மொழியில் சாத்திரம் அறிந்து அவளில் கரைந்து அருகில் சமைந்து எழுத ஆயிரம் பாடல் சுரந்து மறைகள் உரைக்கும் உண்மை உணர்ந்து உருகி உறையும் உள்ளம் அழிந்து அவளின் மடியில் அவளின் மகளாய் உறங்கிப் போய் விடும் பெருவரம் கேட்டேன்.